மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 18 ஜன 2020

சிவசேனாவை ஆதரிக்க மாட்டோம் : காங்கிரஸ்

சிவசேனாவை ஆதரிக்க மாட்டோம் : காங்கிரஸ்

மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவை ஆதரிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் மும்பை நகர தலைவர் சஞ்சய் நிரூபம் தெரிவித்துள்ளார்.

மும்பை மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்றவோ அல்லது மேயர் பதவிக்கோ சிவசேனாவை காங்கிரஸ் ஆதரிக்காது. எனவே சிவசேனாவை எதிர்க்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் மும்பை நகர தலைவர் சஞ்சய் நிரூபம் தெரிவித்தார். மும்பையை கைப்பற்ற சிவசேனாவும் பா.ஜனதாவும் மீண்டும் கூட்டணி சேர்ந்து கொள்ளும். மாநகராட்சியில் எதிர்கட்சியாக செயல்பட காங்கிரஸ் தயாராக உள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேபோல் மூத்த தலைவர் குருதாஸ்சாபத்தும் செய்தியாளர்களை சந்தித்து இதேபோன்று கருத்தை தெரிவித்தார். இதற்கிடையே மும்பை மேயர் பதவிக்காக காங்கிரஸ் உதவியை நாடவில்லை என்று சிவசேனா மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி மேல்சபை எம்.பியுமான சஞ்சய்ரவுத் கூறியதாவது:-

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாங்கள் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே சிவசேனாவை சேர்ந்தவர் தான் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவர். இது தொடர்பாக காங்கிரஸிடம் நாங்கள் ஆதரவு எதிர்பார்த்தோம் என வெளியான தகவல் தவறானது.

மார்ச் 9ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெறும் நாள் வரை பொறுத்து இருந்தால் அதற்கான விடை உங்களுக்கு தெரியும என்று அவர் கூறினார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon