மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

இந்திய அணிக்கு மூத்த வீரர்கள் அறிவுரை

இந்திய அணிக்கு மூத்த வீரர்கள் அறிவுரை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை திண்டாடச் செய்தனர். இதுகுறித்து டெண்டுல்கர், “ஒரு தோல்வி இந்தத் தொடரை முடிவு செய்யாது. இது மீண்டு வர முடியாத தோல்வியல்ல, தொடரின் ஒரு பகுதிதான். இந்திய அணியின் உத்வேகம் பற்றி எனக்குத் தெரியும். அதை ஆஸ்திரேலிய அணியும் அறியும். இந்திய அணி எழுச்சி பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட தகவலில், இந்திய அணியின் ஆட்டத்தை கிண்டல் செய்து விமர்சித்திருந்தார். அதில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது அம்பையர் அவுட் சிம்பலை மட்டுமே காட்டிவந்தார் என்று தெரிவித்திருந்தார். மேலும் இது போன்ற மோசமான சூழ்நிலைகளிலிருந்து அணி மீண்டு வருவதற்கு ரசிகர்களின் ஆதரவு மிக முக்கியம், அதனால் அணிக்கு தொடர்ந்து ஆதரவு தரும்படியும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பூனே மைதானத்தின் ஆடுகளம் சாதகமாக இல்லை என்ற கருத்தினை தெரிவித்திருந்தார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon