மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 24 ஜன 2020

வாரிசுகளை விரட்டி சொத்தை அபகரித்த தினகரன் : திமுக !

வாரிசுகளை விரட்டி  சொத்தை அபகரித்த தினகரன் : திமுக !

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளை விரட்டி விட்டு, அவரது போயஸ் கார்டன் இல்லத்தை கபளீகரம் செய்து அமர்ந்திருக்கும் டிடிவி தினகரனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றி விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று திமுக எம்.எல்.ஏ., துறை சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதவை குற்றவாளி என்று தண்டித்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பெயரில் தமிழக அரசு மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதை கண்டித்த ஸ்டாலின், அரசு திட்டங்களில் ஒரு குற்றவளியின் பெயரை பயன்படுத்தியது சட்ட விரோதம் என்று தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவை குற்றவாளி என்று கூறியதற்கு கடும் கண்டனமும் இதற்கு ஸ்டாலின் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதிமுக துணை பொது செயலாளர் தினகரன் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தினகரனை எச்சரிக்கை வகையில் திமுக எம்.எல்.ஏ., துறை சந்திரசேகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், "ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளை விரட்டி விட்டு, அவரது போயஸ் கார்டன் இல்லத்தை கபளீகரம் செய்து அமர்ந்திருக்கும் டிடிவி தினகரனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றி விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. பத்திரிகையாளர் சந்திப் பில் நாக்குத் தவறி தவறுதலாக வரும் வார்த்தைகளுக்கு உள் நோக்கம் கற்பித்து அறிக்கை விடுவது ஆரோக்கியமான அரசி யல் அல்ல.

ஸ்டாலினை விமர்சித்தாவது அதிமுகவுக்குள் ஆக்கிரமித்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என திட்டமிட்டு செயல்படுகிறார் தினகரன். பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடும் அறிக்கைகளால் அதிமுகவுக்குள் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில் ஸ்டாலினை விமர்சித்து தினகரன் அறிக்கை விட்டுள்ளார். ஸ்டாலினை விமர்சிப்பது, ஆழம் தெரியாமல் காலை விட்டு மூழ்கிய கதையாக போய்விடும் என்பது அவர் உணர வேண்டும்.

அந்நியச் செலவாணி மோசடி போன்ற வழக்குகளில் அவருக்கு அனுபவம் இருக்கலாம். ஆனால், அரசியலில் அனுபவம் போதாது. அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத தினகரன், எப்படி துணைப் பொதுச் செயலாளராக முடியும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேள்வி எழுப்பி யுள்ளனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் ஸ்டாலினை விமர்சித்துள்ளார். அதிமுக தொண்டர்களால் மதிக்கப்படாத தினகரன், விரைவில் அந்தக் கட்சி தொண்டர்களால் விரட்டப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஸ்டாலினிடம் இதுபோன்ற விபரீதமான விளையாட்டுகள் வேண்டாம் என அவரை எச்சரிக்க விரும்புகிறேன் என்று துரை.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon