மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேதி மாற்றம்!

போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேதி மாற்றம்!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து கடந்த ஜனவரி-17 ஆம் தேதியே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தற்போது தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி-6ம் தேதி முதல் 28ம் தேதி வரை 9 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேதி மார்ச்-5 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டம் மேலும் 15 நாட்களுக்கு(மார்ச்-15) காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால், போலியோ சொட்டு மருந்துக்கான முதல் கட்ட முகாம், மார்ச், 5ம் தேதிக்குக்கு பதிலாக, ஏப்ரல்- 2ம் தேதியும், இரண்டாம் கட்ட முகாம், ஏப்ரல்- 30ம் தேதியும் நடைபெறும் என்று மாவட்ட சுகாதார பணி துணை இயக்குனர் பூங்கொடி கூறினார்.

மேலும் ஒரு கோடியே 80 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை 77 லட்சம் பேருக்கு மட்டுமே ரூபெல்லா தடுப்பூசி ஊசி போடப்பட்டுள்ளதாகவும் தமிழக பொதுசுகாதார இயக்குனர் குழந்தைசாமி அறிவித்துள்ளார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon