மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 18 ஜன 2020

விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல்ː பன்னீர்செல்வம்

விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல்ː பன்னீர்செல்வம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் கடந்த 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்ட போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் மக்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் உண்மையான அதிமுக நாங்கள்தான் எனவும், இரட்டை இலை சின்னம் எங்களுத்தான் சொந்தம் என்று பேசினார்.

இந்நிலையில் தினத்தந்தி நிருபருக்கு அவர் அளித்த பேட்டியில், நாங்கள்தான் உண்மையான அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று நீங்கள் தொடர்ந்து கூறி வருகிறீர்கள். அப்படியானால் அதிமுக பொதுக்குழுவை கூட்ட நடவடிக்கை எடுப்பீர்களா? தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பன்னீர் செல்வம்,

தற்போதைய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையே அதிமுக கட்சியின் சட்டத்துக்கு புறம்பானது மற்றும் செல்லத்தக்கது அல்ல. பொதுச்செயலாளர் பதவி காலியாக இருக்கும் போது ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகி அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் (நான்) அதிமுகவின் பணிகளை கவனிப்பார்கள் என்றுதான் இருக்கிறது. இதனை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருகிறார்கள். கூடிய விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். அதற்கு பின்னால் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்வு கட்சியின் சட்டத்திட்டத்தின்படி உறுப்பினர்கள் எல்லோரும் ஓட்டுப்போட்டு தேர்தல் நடைபெறும். அந்த தேர்தல் மூலம் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கு பின்பு முறையாக அங்கீகாரம் பெறும் வகையில் பொதுக்குழுவும், செயற்குழுவும் கூட்டப்படும் என்று பதிலளித்தார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon