மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் அருந்தினால் கேன்சர் வரும்!

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் அருந்தினால் கேன்சர் வரும்!

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் அருந்துவதால்,புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக டாக்டர் அஷ்வின் விஜய் தெரிவித்துள்ளார்.

பொதுவாக,பள்ளி ,கல்லூரி மாணவர்கள்,அலுவலகங்களுக்கு செல்பவர் என அனைவரும் பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் தண்ணீர் அடைத்து அருந்துகின்றனர். ஆனால், பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களை பெட் பாட்டில்கள் என கூறுவோம், அதாவது polyethylene terephthalate என்னும் கெமிக்கலில் ஆர்சனிக்,பென்ஸின் வேதிப்பொருள்கள் கலந்து இருப்பதால்,கேன்சர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதோடு,பாட்டில்களை சூரிய வெளிச்சத்தில் வைக்கும்போது,அதனுள் இருக்கும் பிளாஸ்டிக் வெயிலில் உருகி நாம் அருந்தும் தண்ணீருடன் கலக்க வாய்ப்பு இருக்கிறது. நமது உடலில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தேவைக்கு மட்டும் சுரப்பது நல்லது. ஆனால்,பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் அருந்துவதால்,ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகளவில் சுரக்க ஆரம்பிக்கும். அதனால்,பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.

இதற்கு மாற்றாக,செம்பு பாத்திரம் , பாட்டில்களில் தண்ணீர் அருந்துவதால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. இது தண்ணீர் அருந்துவதற்கு மட்டுமல்லாமல், நம் உடம்புக்கு,மூளைக்கு, இதயத்துக்கு,குடலுக்கு ,தோலுக்கு மற்றும் செரிமான அமைப்புக்கு நல்லது. மேலும்,இது இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கின்றது. அதனால்,பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது என மருத்துவர் தெரிவித்துள்ளார்

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon