மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

ஒடிசாவில் காங்கிரஸ் வீழ்ந்த வரலாறு!

ஒரு காலத்தில் காங்கிரஸ் வலுவாக காலூன்றி இருந்த ஒடிசா மாநிலம் தற்போது பாஜக வசம் சென்றது எப்படி?

சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், 849 சீட்களில் காங்கிரஸ் வெறும் 66 சீட்களை மட்டுமே வென்றிருக்கிறது. ஆனால் பாஜகவின் வாக்கு சதவிகிதம் பத்து சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. கடந்த தேர்தலில் 36 சீட்களை பெற்றதில் இருந்து இந்த தேர்தலில் 306 சீட்களை பெறும் அளவு வளர்ந்திருக்கிறது பாஜக.

காங்கிரஸ் ஒடிசாவை இழந்து கொண்டிருக்கிறது என்பது 1995 ஆம் ஆண்டு நடந்த மாநில தேர்தல் முடிவுகளிலேயே தெரிந்து விட்டது. 1995 ஆம் ஆண்டு தேர்தலில் மெலிய பெரும்பான்மை கொண்டு வெற்றி பெற்றாலுமே, 40 % வாக்குகளை மட்டுமே பெற்றது. ஜானகி பல்லப் பட்நாயக் முதலமைச்சரானார். பழங்குடியின தலைவர் ஒருவரை வளர்க்க வேண்டும் என கட்சி தீர்மானித்திருந்தது.

ஆனால், ஒடிசாவில் இருந்து வந்த எந்த அரசியல்வாதியும்,மாநில தலைமையை ஏற்கும் அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை. பட்நாயக் இடத்தில் ஒன்பது முறை பாராளுமன்ற உறுப்பினரான கிரிதர் கமங் வந்தமர்ந்தார். பாஜக மற்றும் பாஜத கூட்டணியின் எதிர்ப்பை முறையே சமாளிக்கவில்லை. மாநிலத்தை சரி வர ஆளவில்லை. அதன் பின் நடந்த 2000 மாநில தேர்தலில், பெரும் தோல்வியை காங்கிரஸுக்கு பெற்றுக் கொடுத்தார். இதை தொடர்ந்த ஒவ்வொரு தேர்தலிலும், காங்கிரஸின் தோல்வி விகிதம் பெருகிக் கொண்டே போனது. 2000 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை ஒடிசாவில் காங்கிரஸின் வாக்கு வங்கி 35 சதவிகிதத்தில் இருந்து சதவிகிதமாக குறைந்திருக்கிறது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon