மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 12 நவ 2019

கருங்காலிகளுக்கு தகுதி இல்லை : செங்கோட்டையன்

கருங்காலிகளுக்கு தகுதி இல்லை : செங்கோட்டையன்

பதவி சுகத்தை அனுபவித்துச் சென்ற ஒ.பன்னீர்செல்வம் ஒரு கருங்காலி என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அவர் பேசியபோது கூறியதாவது, வெண்ணிறை ஆடை நிர்மலா, ஜெயலலிதா எதிர்த்து போட்டியிட்டபோது, இதே ஒ.பன்னீர்செல்வம்தான் வெண்ணிறை ஆடை நிர்மலாவுக்கு முதன்மை ஏஜெண்டாக இருந்தவர். முதல் அமைச்சர் ஆகும் தகுதி கட்சியின் சாதாரண தொண்டனுக்கும் உள்ளது. ஆனால் ஒ.பன்னீர்செல்வம் போன்ற கருங்காலிகளுக்கு தகுதி இல்லை. அம்மாவுக்காக ரத்தம் சிந்தியவர்கள், வியர்வை சிந்தியவர்கள், வாழ்ந்தவர்கள், தியாகம் செய்தவர்கள் உங்களைப்போல கருங்காலிகள் அல்ல.

கொடநாட்டில் நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பொருளாளராக இருந்த ஒ.பன்னீர்செல்வத்தை கூட்ட அறைக்குள் வரக்கூடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். ஒ.பன்னீர்செல்வம் மகன் மற்றும் சகோதரர், உறவினர்களை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கினார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon