மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

விருந்தில் கலந்து கொள்ள மாட்டேன்: டிரம்ப்

விருந்தில் கலந்து கொள்ள மாட்டேன்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் ஆணையத்தின் விருந்து நிகழ்வில் நான் கலந்து கொள்ள மாட்டேன் இவ்வாறு தனது ட்வீட் மூலம் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமான இந்த பாரம்பரியத்தை டிரம்ப் மீறுகிறார்.

அமெரிக்காவின் எதிரிகளாக ஊடகத்தினர் இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடக்கும் இந்த விருந்தில் அமெரிக்க அதிபர் மற்றும் பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வர். முதல் முறையாக இந்த விருந்து வாஷிங்டன் டிசியில் 1920 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டின் விருந்து வருகின்ற ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக அமெரிக்காவின் முன்னணிச் செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகையினுள் செய்தி சேகரிக்க தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon