மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

எம்.எல்.ஏ.கருணாஸ் மீது செருப்பு வீச்சு!

எம்.எல்.ஏ.கருணாஸ் மீது செருப்பு வீச்சு!

முதல்வரை மக்கள் தேர்வு செய்ய தேவையில்லை, சட்டமன்ற உறுப்பினர்களே முதல்வரை தேர்வு செய்வார்கள் என சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்னர், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகர் கருணாஸ் கூறியதாக, ஒரு செய்தி வேகமாக பரவி வந்தது. இதையடுத்து, கருணாஸை விமர்சித்து அதிகம் பேர் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இதனால், தன்னைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறாக செய்திகளை பரப்புகின்றனர் என கருணாஸ் நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், நேற்று தனது தொகுதியான திருவாடனைக்கு சென்ற கருணாஸ் அங்கிருந்து புறப்படும் போது சாலையில் இருந்த முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் கருணாஸின் கார் மீது செருப்புகளை வீசி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதனால்,அதிர்ச்சியடைந்த கருணாஸ் இதுகுறித்து, தனது கார்மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் செருப்புகளை வீசி தாக்கியதாக போலீசில் புகார் கொடுத்தார். அதன பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கருணாஸின் கார் மீது செருப்புகளை வீசிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon