மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

பாடுவதற்காக திருமணத்தை நிறுத்திய பூங்குயில்

பாடுவதற்காக திருமணத்தை நிறுத்திய பூங்குயில்

தமிழ் சினிமாவின் பிரபலமான பாடகியாக திகழ்பவர், வைக்கம் விஜயலட்சுமி. இமான் இசையில் உருவான ‘என்னமோ ஏதோ’ திரைப்படத்தின் ‘புதிய உலகை’ பாடலின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். மிகவும் தனித்துவம் வாய்ந்த குரலுக்கு சொந்தக்காரர். ‘கோடையில மழைபோல’, ‘மழை இங்கில்லையே’ மற்றும் ‘யாரு இவன்’ உள்ளிட்ட பல சிறந்த பாடல்களை தமிழுக்கு தந்திருக்கிறார். இவர் ‘காயத்ரிவீணா’ என்ற அரிய வகை இசைக்கருவியை கையாளுவதில் வல்லவர். பிறவியிலேயே பார்க்கும் திறனற்றவரான விஜயலட்சுமிக்கு சந்தோஷ் என்ற இசையமைப்பாளருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று வருகிற மார்ச் மாதம் திருமணம் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவரது கண் பார்வையை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து விஜயலட்சுமியின் பெற்றோர், திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு பள்ளி ஆசிரியையாக வேலை செய்யவேண்டும் என்று கூறுகிறார். மேலும் சில நிபந்தனைகளும் விதிக்கிறார். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதால் கல்யாணத்தை இப்போதே நிறுத்திவிட்டோம் என்று தெரிவித்தனர். விஜயலட்சுமி கூறுகையில், நான் யாருடைய வற்புறுத்துதலாலும் இந்த திருமணத்தை நிறுத்த சொல்லவில்லை, இது நானே சுயமாக எடுத்த முடிவுதான் என்று கூறியிருக்கிறார். நான் யாருக்காகவும் பாடுவதை நிறுத்தமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon