மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

டாஸ்மாக் கடைகள் மூடல் : சாதகமா .........பாதகமா ?

டாஸ்மாக் கடைகள்  மூடல் :  சாதகமா .........பாதகமா ?

தமிழகத்தில் 6700 டாஷ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, தமிழக அரசால், மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுவந்தன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்ததால், கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, அப்போது 500 மதுக்கடைகளை மூடினார். பின்னர், மீதியிருந்த 6200 டாஷ்மாக் கடைகளிலிருந்து, ஆண்டுக்கு 26500 கோடி வருவாய் வந்தது. இந்நிலையில், புதிய முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, பதவியேற்றதும் முதல் கையெழுத்திட்டது 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்குதான்,

500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி வருவாய் அரசுக்கு இழப்புகள் ஏற்படுமாம். இவ்வாறாக, 500 கடைகள் மூடப்படுவதால் அதிக வருவாய் இழக்காமல் இருக்க, டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும், செயலாளருமான கிர்லோஷ்குமார் ஐ.ஏ.எஸ், மூடிய கடைகள் வருமானத்தை ஈடுகட்டும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவருகிறார் என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். அரசின் பெரும்பாலான நலத்திட்டங்கள் இத்தகைய டாஸ்மாக் கடைகளின் வருமானத்தால்தான் சரிக்கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளின் வருவாய் இழப்பால் அரசுக்கு சாதகத்தைவிட பாதகம்தான் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon