மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

அரவிந்த் சாமியும் பேபி நைனிகாவும்

அரவிந்த் சாமியும் பேபி நைனிகாவும்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு பலரும் வியக்கும் கதாநாயகியாக வளர்ந்தவர்கள் இங்கே ஏராளம். ஸ்ரீ தேவி, மீனா மற்றும் ஷாலினி உள்ளிட்ட பலர் இதற்கு சான்றாக விளங்குகிறார்கள். ஒரு சிலர் பெரிதாக முன்னேற்றம் காண முடியாமல் போகலாம். ‘அஞ்சலி’ திரைப்படத்தின் மூலமாக பலரது மனதையும் கவர்ந்த பேபி ஷாம்லி வளர்ந்த பின்பு சரியான பட வாய்ப்புகள் அமையாமல் இருக்கிறார். சிறுவயது முதலே திரையுலகில் கால்பதித்தவர்களின் நடிப்பாற்றல் கவனிக்கதக்கதாக இருக்கும்.

நம் தமிழ் சினிமாவின் கடந்த சில வருடங்களில் வெகு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே கவனம் ஈர்த்தனர். ‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்த பேபி சாதனா, ‘தெய்வத்திருமகள்’ பேபி சரா மற்றும் ‘தெறி’ நைனிகா. மீனாவின் மகள் நைனிகா, ‘தெறி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இவர் தற்போது அரவிந்த் சாமி நடிக்கும் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மீனா போலவே இவரும் பெரிய நடிகையாக ஜொலிப்பார் என எதிர்பார்க்கலாம்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon