மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

மூன்றாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்!

மூன்றாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்!

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயம் என சிபி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

தமிழகத்தில், மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என பல பயிற்று மொழிகளும் பின்பற்றப்படுகின்றன. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, தேனி, கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மற்ற மாநில மாணவர்களும் படிக்கும் வகையில், பிற மாநில மொழிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

கடந்த 2006 ஆம் ஆண்டு, அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டது. ஆதன்படி, அனைத்து பிற மொழி பள்ளிகளிலும், கடந்த கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமானது.

கடந்த 2014 ஆம் ஆண்டு, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக கற்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, முதலில் ஒன்றாம் வகுப்புக்கு தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. பின்னர், இரண்டாம் வகுப்புக்கும் தமிழ் கட்டாயமானது. அதைத் தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டு முதல் மூன்றாம் வகுப்புக்கும், தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

அதற்கான தமிழ் பாடப் புத்தகங்களை, தமிழக பாடநுால் கழகத்தின் மூலம் பள்ளிகள் கொள்முதல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon