மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

அமைச்சர் விழாவில் தள்ளுமுள்ளு : எம்.எல்.ஏ.கைது!

அமைச்சர் விஜயபாஸ்கரின் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் அமளி ஏற்பட்டதையடுத்து, திமுக எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

அந்த விழாவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மெய்யநாதன் கலந்து கொண்டு சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்குவதாக இருந்தது. இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த விழாவில் திடீரென கலந்து கொள்வதாக அறிவித்ததோடு, திமுக எம்.எல்.ஏ. அங்கு வரக் கூடாது என்று உத்தரவிட்டதாக தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் பரவியதால், ஆத்திரமடைந்த திருவரங்குளம் மக்கள், அமைச்சர் என்பதற்காக தங்களுடைய பிரதிநிதியான எம்.எல்.ஏ.-வை அவமதிப்பதா என்று கேள்வி எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் எம்.எல்.ஏ. மெய்யப்பனும் மறியல் செய்தார். அப்போது போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் எம்.எல்.ஏ.-வின் வேட்டி திடீரென அவிழ்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் எம்.எல்.ஏ. உள்பட மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஈடுபட்டனர். பிறகு வேனில் இருந்து இறங்கிய எம்.எல்.ஏ. மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்ததைத் தொடர்ந்து அவரை மீண்டும் கைது செய்து ஆலங்குளத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon