மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

காசியின் கொடூர மறுபக்கம்!

காசியின் கொடூர மறுபக்கம்!

காசி என அழைக்கப்படும் வாரணாசி ஒரு புனித நகரம் என்ற அளவில் தான் நாம் அறிவோம்.இங்குள்ள கங்கையில் நீராடினால் பாவங்கள் தீரும் என்று காசியை நோக்கி இந்தியாவெங்கும் மக்கள் வாராணாசியை நோக்கி வருகிறார்கள். கோயில்கள் நிறைந்த நகரமான காசியில் மறுபக்கம் அதிர்ச்சியடைய வைப்பதாக உள்ளது.ஆனால், பத்து வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளை கடத்தி வந்து பாலியல் பலாத்காரத்துக்கு தள்ளுகின்றனர்

வாரணாசி என்றாலே கோயில்கள் நிறைந்த ஆன்மிகத்தலம். உலகளவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பது அறிந்தது. ஆனால், இளம் பெண்கள், பிறந்த பெண் குழந்தைகள் என்று கடத்தி வந்து விபச்சாரத்திற்கு தள்ளப்படும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அப்படி கடத்தப்படும் பெண் குழந்தைகள் நேராக சிவப்பு விளக்கு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவது இல்லை. இவர்கள் ஒரு இடத்தில் அடைக்கப்படுகின்றனர். அங்கு பாலியல்ரீதியான பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சொன்னபடி கேட்காத குழந்தைகளுக்கு மின்சார ஷாக் அளிப்பது, அடித்து, உதைத்து சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்துவது போன்ற செயல்களை செய்து வருகிறார்களாம். இதை அறிந்த சமூக நல அமைப்பினர் இங்குள்ள குழந்தைகளை இந்த கொடுமைகளில் இருந்து கஷ்டப்பட்டு மீட்டு எடுத்திருக்கிறார்கள்.

மருத்துவமனையில் பிறக்கும் பெண் குழந்தைகள் கொஞ்ச நாட்களிலேயே கடத்தப்பட்டு இங்கே கொண்டு வரப்படுகின்றனர். பிறந்து பல மாதங்களே ஆன பெண் குழந்தைகள் இங்கே கடத்தி வரப்படுகின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு விரைவில் பருவம் அடைவதற்கான ஹார்மோன் ஊசி மற்றும் ஹார்மோன் மாத்திரைகளை கொடுக்கின்றனர். பருவம் அடைந்தவுடன் விபச்சாரத்தில் தள்ளுகிறார்கள். இந்த சம்பவங்கள் குறித்து ''குடியா'' என்ற பெயரில் ஒரு குறும்படமும் வீடியோ பதிவாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளை கடத்தி வருவது, அவர்களை எப்படி அடைத்து வைக்கிறார்கள். அவர்களை மீட்டு எடுத்த சமூக நல அமைப்பினரின் குரல்கள் எல்லாம் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ''குடியா'' குறும்படம் கீழே உள்ள லிங்கில் உள்ளது.

https://www.youtube.com/watch?v=D05dN06w4yY

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon