மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 18 ஜன 2020

வெற்றி பெறுமா நோக்கியா 3310?

வெற்றி பெறுமா நோக்கியா 3310?

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளின் முதன்மை மொபைல் brand ஆக திகழ்ந்த ஒன்று நோக்கியா. ஸ்மார்ட்போன் விற்பனையிலும் தனது இடத்தினை பிடித்திருக்க வேண்டிய நிறுவனம், அதன் சிறு தவறினால் தனது மொபைல் விற்பனையில் கடும் தோல்வியை தழுவியது. அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு os பயன்படுத்தப்பட்ட காலத்தில் விண்டோஸ் os உடன் மொபைல்களை வெளியிட்டது அந்நிறுவனத்தின் ஒரு பெரிய சரிவாக இருந்தது. இருப்பினும் அந்த நிறுவனத்தின் மீதுள்ள நம்பிக்கையைக் மக்கள் யாரும் இழக்கவில்லை என்பதை அதன் புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 6 pre-booking வெளியான நாளில் தெரியவந்தது. ஆன்ட்ராய்டு os கொண்டு வெளியான நோக்கியாவின் முதல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒரே நாளில் பல லட்சம் பயனர்களால் pre-booking செய்யப்பட்டு, பிற நிறுவனங்களை வியப்பில் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து 3310 என்ற பழைய மாடலை மீண்டும் வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி அது ஸ்மார்ட்போன் போன்று வடிவமைத்து வெளியாகும் என்ற தகவலும் வெளியாகி ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால் இன்று வெளியான செய்தி அதன் விற்பனை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியை உண்டாக்குகிறது. காரணம் அதில் மீண்டும் விண்டோஸ் os பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன் பயனர்கள் பெரும்பாலானோர் ஆன்ட்ராய்டு os பயன்படுத்தி வரும் நிலையில் இந்த மாடல் ஏன் மீண்டும் விண்டோஸ் os உடன் வெளியாகயுள்ளது என்பது சர்ச்சையான ஒன்று. ஆனால் இந்த மாடலின் சிறப்பம்சம் அதன் கேமரா 41MP என்பதால் அதிகம் போட்டோ எடுக்கும் சிலர் இதனை வாங்க ஆர்வம் காட்டலாம், இருப்பினும் ஆன்ட்ராய்டு os எனில் இதன் விற்பனை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon