மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 18 ஜன 2020

இன்றைய ஸ்பெஷல்: தம் ஆலூ!

இன்றைய ஸ்பெஷல்: தம் ஆலூ!

தேவையான பொருட்கள்

பேபி பொட்டேட்டோஸ் - 8

வெங்காயம் - 2

தக்காளி - 3

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

முந்திரி - 8

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

தனியா தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

கெட்டி தயிர் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் / நெய் - தேவையான அளவு

மல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை

உருளை தோலுரித்து முர்க்கரன்டியால் பல இடங்களில் குத்தி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், இஞ்சி பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும். தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும். எண்ணெய் சூடானதும் வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கவும். பிறகு தக்காளி விழுது சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது உப்பு மற்றும் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து வதக்கவும். இப்பொழுது உருளையும் சேர்த்து பிரட்டவும். ஐந்து நிமிடம் கழித்து தயிர் மற்றும் முந்திரி விழுது சேர்த்து கிளறவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் மல்லி இலை தூவி பரிமாறவும். சப்பாத்தி ரொட்டி சரியான காம்பினேஷன்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon