மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் : முகாமிட்ட திருநாவுக்கரசர்

 காங்கிரஸ்  நிர்வாகிகள் பட்டியல் : முகாமிட்ட திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ், இளங்கோவனுக்கும், இன்னாள் தலைவர் திருநாவுக்கரசுருக்கும் அறிக்கை போராட்டமும், கருத்துப்போராட்டமும், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், புதிய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலைத் தயாரித்து கட்சித்தலைமையிடம் ஒப்புதல் பெறுவதற்காக டெல்லியில் திருநாவுக்கரசர் முகாமிட்டுள்ளார்.

தமிழக காங்கிரசில் தற்போது இருக்கும் 62 மாவட்டத் தலைவர்களில் 50 மாவட்டத் தலைவர்கள் இளங்கோவன் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அதனால் இளங்கோவன் ஆதரவாளர்களை களையெடுத்தால்தான், கட்சியை சரியாக கொண்டுபோகமுடியும் என்று புதிய நிர்வாகிகளை மாற்றி, இளங்கோவன் தரப்பு ஆதரவாளர்களை ஓரம்கட்டபோகிறார் என்று, நமது மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையில் முன்னவே பதிவுசெய்துயிருந்தோம் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழகத்தில் உள்ள 62 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை 74 மாவட்டமாகப் பிரித்து, புதிய நிர்வாகிகள் பட்டியலை, டெல்லியில் முகுல் வாஸ்னிக் பார்வைக்கு அனுப்பி வைத்தார், அதில் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள், தங்கபாலு ஆதரவாளர்கள் என்று கணிசமாக போக, மீதி திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் பெயர் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட டெல்லி தலைமை காலதாமதம் செய்வதால், பிப்ரவரி 22ஆம் தேதி டெல்லிக்கு சென்ற திருநாவுக்கரசர், முகுல் வாஸ்னிக்கை சந்தித்து முறையிட்டுள்ளார், அதன் பிறகு, உ.பி.யிலிருந்துவந்த ராகுலை சந்தித்து, தமிழகத்தில் கட்சி துவண்டுபோய் உள்ளது, புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சிப் பணியை தொடங்கவேண்டும், அப்போதுதான் கட்சிக்கு புத்துனர்ச்சிகிடைக்கும் என்று தெரிவித்து டெல்லியிலே முகாமிட்டுள்ளார் திருநாவுக்கரசர்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon