மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

உண்மை தெரியாத எதிர்கட்சிகள் ; வெங்கையா நாயுடு

உண்மை தெரியாத எதிர்கட்சிகள் ; வெங்கையா நாயுடு

சமீபத்தில் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடந்த வெற்றி விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்டு வெங்கையா நாயுடு பேசியபோது, பிரதமர் எடுக்கும் முடிவுகளுக்கு மக்கள் ஆதரவாகவே உள்ளனர் என்றார். இதுகுறித்து கூட்டத்தில் அவர் பேசியதாவது

புழக்கத்திலிருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்த நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து முடிவுகளுக்கும் மக்கள் ஆதரவாகவே உள்ளனர். சமீபத்திய உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதே இதற்கு சாட்சி. எதிர்க்கட்சியினர்தான் அடிப்படை உண்மைகள் தெரியாமல் பேசி வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத்தான் காங்கிரஸ் கட்சி பேசி வருகின்றது. இது அப்பகுதியில் தீவிரவாதம் வளரவே உதவும். 60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என மக்களிடம் எடுத்துக் கூற கடமைப்பட்டுள்ளது என்று பேசினார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon