மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 18 ஜன 2020

மீண்டும் எஸ்.பி.ஐ ஏடிஎம்-ல் ரூ.2000 கலர் ஜெராக்ஸ்!

மீண்டும் எஸ்.பி.ஐ ஏடிஎம்-ல் ரூ.2000 கலர் ஜெராக்ஸ்!

உத்தர பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் இயந்திரத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக கலர் ஜெராக்ஸ் வந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் சங்கம் விஹார் பகுதியிலுள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் ஒன்றில், ’சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா' என்று அச்சடிக்கப்பட்ட போலி ரூ.2,000 நோட்டுகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரின்க்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணப் பாதுகாப்பாளராக பணியாற்றி வந்த மொஹமத் ஈஷா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் மீண்டும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் இயந்திரத்தில் 2000 ரூபாய் நோட்டின் கலர் ஜெராக்ஸ் வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரியான அரவிந்த் குப்தா என்பவர்,அருகிலிருக்கும் எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையத்திற்கு சென்று 10,000 ரூபாய் எடுத்துள்ளார். அப்போது 5 இரண்டாயிரம் நோட்டுகள் வந்துள்ளது. அதில் ஒரு ரூபாய் நோட்டு மட்டும் போலியாக இருந்ததை கண்டுபிடித்துள்ளார். பின் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த மற்றவர்களிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். .

இதனைத் தொடர்ந்து உடனடியாக அருகிலுள்ள எஸ்.பி.ஐ கிளைக்கு சென்று இந்த தகவலை தெரிவித்துள்ளார்.ஆனால் வங்கி ஊழியர்கள்,இவரின் புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர். எனவே வங்கி முன் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அரவிந்த் குப்தாவின் புகாரை ஏற்றுக் கொண்டனர். இதுபோன்று ஏடிஎம்-ல் அடிகடி போலி ரூபாய் நோட்டுகள் வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon