மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 24 ஜன 2020

மக்களின் கோபம் தீரவில்லை : ப.சிதம்பரம்

மக்களின் கோபம் தீரவில்லை  : ப.சிதம்பரம்

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டு மக்கள் இன்னமும் கோபத்தில்தான் இருக்கின்றனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பொதுமக்களின் கோபம் குறித்து ஐதராபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டு மக்கள் இன்னமும் கோபத்தில்தான் உள்ளனர். கோபம் இல்லை என்று சொல்லி விட முடியாது. இந்தியர்கள் மிக, மிக பொறுமைசாலிகள். அவர்கள் பொறுமையாக இருப்பதை வைத்து எடை போட்டு விட முடியாது. உரிய நேரத்தில்தான் அவர்களது கோபம் வெளிப்படும்.

காங்கிரஸ் ஆட்சியின் போது நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து தெருக்களில் இறங்கி மக்கள் போராடவில்லை. மிகவும் அமைதியாக இருந்தனர். ஆனால் அதற்காக அதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமல்ல. தேர்தலில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

தற்போது மராட்டியத்தில் பாஜக அதிக இடங்களில் வென்றிருப்பதால், அவர்கள் அறிவித்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திட்டத்தை மக்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்று அர்த்தமல்ல. மக்கள் ரூபாய் நோட்டு விவகாரத்தை அங்கீகரிக்கவில்லை. ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் பொருளாதார இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon