மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

ஸ்டாலினுக்கு வேலுமணி பதிலடி!

ஸ்டாலினுக்கு வேலுமணி பதிலடி!

தமிழகத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற திமுக துடிக்கிறது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து, சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரின் பெயரில் அரசு திட்டங்கள் செயல்படுத்துவது சட்ட விரோதமானது என்று தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, மு.க.ஸ்டாலின் கருத்துக்கு பதிலடிகொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஜெயலலிதா குறித்த கருத்துகளுக்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். குறுக்கு வழியில் திமுக ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறது என்று தெரிவித்தார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon