மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

சிம்லாவில் கலைத் திருவிழா

சிம்லாவில் கலைத் திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் சிற்பக் கலைஞர்கள், ஓவியர்களுக்காக தேசிய அளவிலான போட்டிகள் ‘ஷேத்ரிய கலாகார் ஷிவிர்’ என்ற பெயரில் திருவிழாவாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான போட்டிகள் ஹிமாச்சல் பிரதேசம் சிம்லாவில் தொடங்கியுள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் அம்மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சிற்பக் கலைஞர்கள் பல்வேறு விதமான கடவுள்களின் சிலைகளை வடித்து வருகின்றனர். அவை பின்னர் விற்பனைக்கு வைக்கப்படும். இதேபோல் ஓவியப் போட்டிகளில் இயற்கைக் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுகின்றன. வெற்றியாளர்களை தேர்வு செய்வதில் கடும் போட்டிகள் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon