மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

பிரதமருக்கு முதல்வர் கடிதம் !

பிரதமருக்கு முதல்வர் கடிதம் !

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழகத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி முதல்வர் பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் செயல்பாடு தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியிள்ள கடிதத்தில் கூறுகையில், "மேகதாதுவில் ரூ.5,921 கோடி மதிப்பில் கர்நாடக அரசு அணைக்கட்ட திட்டமிட்டுள்ளது. அதையடுத்து, உடனடியாக மேகதாதுவில் அணை கட்டும், கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகம் உள்பட சக மாநிலங்களின் ஒப்புதலின்றி, கர்நாடகா தன்னிச்சையாக முயற்சி செய்கிறது. குறிப்பாக தமிழகத்தை பாதிக்கும், கர்நாடகாவின் எந்த திட்டத்துக்கும் அனுமதி வழங்கக் கூடாது" என்று முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon