மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

வேனில் சகலவசதிகளுடன் உலகம் சுற்றும் தம்பதி!

வேனில்  சகலவசதிகளுடன் உலகம் சுற்றும் தம்பதி!

ரஜினி நடித்து எண்பதுகளில் வந்த திரில்லர் படம் 'கழுகு'. இளையராஜாவின் அற்புதமான பாடல்களால் இன்றும் நினைவு கூறக்கூடிய படமாக இருக்கிறது. அந்த படத்தில் ரஜினிக்கு திருமணமானவுடன் அவரது மாமனார் ஒரு சொகுசு பேருந்து ஒன்றை பரிசளிப்பார். ஒரு வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் அந்த பேருந்தில் செய்யப்பட்டிருக்கும். அதில் கட்டில், மெத்தை, போன், பாத் டப், உணவு மேஜை, குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி சமையல் அறை என எல்லாமும் இருக்கும். அந்த சொகுசு பேருந்தில் ஏறி தேனிலவு செல்வார்கள் தம்பதிகள். இப்போது அதே மாதிரியான வசதிகளை ஒரு வேனில் செய்து உலகமெங்கும் பயணம் செய்துள்ளார்கள் இங்கிலாந்து தம்பதிகள்.

இங்கிலாந்தின் சௌதம்டன் நகரைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்னைத் என்பவர், தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் நாடு நாடாக சுற்றி வருகிறார். வேன் ஒன்றை பிரத்யேகமாக வீடு போல மாற்றி கடந்த மூன்றரை ஆண்டுகளாக உலகம் சுற்றி வரும் இந்த குடும்பம், இதுவரை 34 நாடுகளை சுற்றி வந்துள்ளனர். தற்போது இந்தியாவில் இருக்கும் அந்த குடும்பத்தினர், இன்னும் பல்வேறு நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவிக்கின்றனர். வீடு போன்ற அந்த வேனில், படுக்கை அறை, சமையல் அறை, நூலகம், கழிவறை என சகல வசதிகளும் உள்ளன. வேனில் வசித்தபடியே மூன்றரை ஆண்டுகளாக உலகம் சுற்றி வரும் மக்கள் வியப்புடன் பாராட்டி வருகிறார்கள்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon