மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 12 நவ 2019

வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டம் : ஜி.கே.வாசன்

வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டம்  : ஜி.கே.வாசன்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள், சமூக அமைப்பினர் , பல்வேறு கட்சியினர், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நெடுவாசலில் எண்ணை படிமம் உள்ள இடத்தை தமாக- கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டார். பின்னர் விவசாயிகள், பொது மக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே இதனை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசு இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வருகிற 27-ஆம் தேதி தமிழக முதல்வர் , பிரதமரை சந்தித்து பேசப்போவதாக கூறியுள்ளார். அப்போது பிரதான கோரிக்கையாக இத்திட்டத்தை கைவிடுவது குறித்து வலியுறுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது. இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon