மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 பிப் 2017

பேரு பெத்த பேரு- அப்டேட் குமாரு

பேரு பெத்த பேரு- அப்டேட் குமாரு

இந்தியாவுலயே இல்ல இல்ல இந்த உலகத்துலயே இவ்வளவு அழகா ஒரு கட்சிக்கு பேர் வைக்க முடியாது. எங்க அண்ணன் ஒருத்தர் ஆரம்பிச்ச கட்சிக்கு தான் அப்படி பேர் வச்சிருக்காங்க. அருமையான பேரு, இந்தப் பேருக்கே எல்லாரும் ஓட்டுப் போடுவாங்க. நேத்துதான் வச்சாங்க, நீங்க அப்டேட்ஸ பாருங்க. கட்சியெல்லாம் நமக்கெதுக்கு.

\\@Kannan_Twitz

அடுத்த பெங்களூர் டெஸ்ட் மேட்'ச்சிக்காக கூடுதலாக தீவிர பயிற்சி எடுக்கவே இந்திய அணி 2 நாட்கள் முன்னரே மேட்'சை முடித்துவைத்தது.

IndvAus\\

\\@Ssundar83Sundar

எம்ஜிஆர்_அம்மா_தீபா_பேரவை

என்னது....

எம்ஜியாரோட அம்மா தீபாவா...\\

\\@r_vichu

ஏன் எல்லாருக்கும் 4-0 தான் வேணுமாமா. இந்த 3-1 எல்லாம் ஒத்துக்கமுடியாதாமா.

-கோலி_மைண்ட்வாய்ஸ்கள்.\\

\\@iamparattai

ஜெ மரணம்பற்றி பேசிய டாக்டர் சீதா கைது.

அந்த வரிசையில் Ops, mks ல ஆரம்பிச்சு தமிழ்நாட்டையே கைது பண்ணனுமே இனி வேட்டை தொடருமோ?\\

\\@senthilcp

ஆர்.கே நகரில் நிற்கப் போகிறேன்.. தீபா அதிரடி அறிவிப்பு! # போக்குவரத்துக்கு இடையூறு இல்லாம அப்டி ஓரமா நில்லுங்க\\

\\@thoatta 3

அடுத்த டெஸ்ட் மேட்ச் பெங்களூர்லையாம். போற வழில அம்மா சமாதி மேல 3 தடவை அடிச்சு சபதம் போட்டுட்டு போங்க, இப்பலாம் அப்படித்தான் போறாங்க\\

\\@thoatta

சாரே, உண்ட கோலி கேப்டனாகலாம் சாரே, பட்சே, எந்த கேப்டனும் தோனியாக முடியாது\\

\\@thoatta

AC துரைசிங்கம் ஆஸ்திரேலியா போய் ஆடி கார குறுக்க மறுக்க ஓட்டி அவனுங்கள கடுப்பாக்குனதுனால தான் இந்தியன் டீமை இந்த அடி அடிக்கிறானுங்க\\

\\@ivanganeshk_s

செய்தி : GV பிரகாஷ்க்கு பாலா படத்துல நடிக்க வாய்ப்பு...

சைக்கோ கேரக்டராம்

சரியான தேர்வு...!👏👏👏\\

\\@jeytwits

மௌனம் சம்மதம்னு மட்டும் அர்த்தம் இல்ல..வாயில நல்லா வருது..சொல்ல வேணாம்னு பார்க்குறேன் என்பதாய் கூட இருக்கலாம்..\\

\\Vinoth Kumar

தீபா கட்சி பேர கேட்டா மாரியம்மன் இந்தியன் பேங்க் தான் நியாபகத்துக்கு வருது\\

\\Villavan Ramadoss

பல நாட்கள் முன்பே தீபாவின் பெயரை அம்மாதீபா என எழுத ஆரம்பித்துவிட்டனர் அவரது பக்தர்கள். ஆகவே பேரவையின் பெயரை MGR அம்மாதீபா என வைத்திருப்பார் என கணிக்கிறேன்.

குரு மூர்த்தி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு பால்கனி ராணிக்கு பயிற்சி தரலாம்.\\

\\தோணி கௌதம்

பெஸ்ட் கேப்டன்னு நான் சொன்னனா சுத்தி இருக்கவன் சொன்னான்டா\\

\\@HAJAMYDEENNKS

பிரதமரை முதலமைச்சர் சந்தித்தது அரசியல் ரீதியானது அல்ல - தமிழிசை #

ஆமா பக்கத்து வீட்டுல பிரச்சினையாம் ,அது சம்பந்தமாதான் சந்திச்சுங்களாம்\\

\\வில்லவன் ராமதாஸ்

ஸ்பென்சர் பிளாசா வாழ்ந்து கெட்டவர் பங்களா மாதிரி இருக்கே... மவுண்ட் ரோடு ஒருவழிப் பாதையாயிடுச்சு...

15 வருஷம் முன்னால ஒழுங்காத்தானய்யா விட்டுட்டு போனேன்? ஏன் இப்படி குட்டிச்சுவராக்கி வச்சிருக்கீங்க?\\

\\Vijay Kumar

இன்னைக்கு மட்டும் 10 பசங்க request அனுப்பி இருக்காங்க. மீசை இல்லாம செவப்பா இருக்கறதால பொம்பள புள்ளைன்னு நெனச்சுட்டாய்ங்களா\\

-லாக் ஆஃப்

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

சனி 25 பிப் 2017