மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

விஜய் சேதுபதிக்குப் பதிலாக சிவகார்த்திகேயன்

விஜய் சேதுபதிக்குப் பதிலாக சிவகார்த்திகேயன்

டி.வி. சீரியல் பார்ப்பவர்களுக்கு பரிச்சயமான வசனம் ‘இவருக்கு பதிலாக இவர் தோன்றுவார்’. இதுபோன்ற சம்பவங்கள் சிலநேரம் திரைப்படங்களிலும் நடக்கும். ஆனால் திரைப்படத்தின் கதாபாத்திரங்களில் மாற்றம் ஏற்படாது, பணிபுரியும் கலைஞர்களில் ஏற்படலாம். ‘சென்னை 600028’ படப்பிடிப்பின்போது நடன இயக்குநர் வேறு ஒரு திரைப்பட வேலையில் பிஸியாக இருந்ததால், அரவிந்த் ஆகாஷ் ஒரு பாடலுக்கு கோரியோகிராப் செய்திருப்பார்.

‘ரேனிகுண்டா’ பட இயக்குநர் பன்னீர்செல்வம், விஜய் சேதுபதியை வைத்து இயக்கிவரும் புதிய படம் ‘கருப்பன்’. இதில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜி தேதிகள் பிரச்னை காரணமாக படத்திலிருந்து விலகி, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் பணிபுரியச் சென்றுள்ளார். ராம்ஜிக்கு பதிலாக ‘ரேனிகுண்டா’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் சக்தி புக் செய்யப்பட்டிருக்கிறார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon