மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பக்குவமில்லாத ராகுல் எதற்கு? அமித்ஷா

பக்குவமில்லாத ராகுல் எதற்கு? அமித்ஷா

காங்., துணைத் தலைவர் ராகுலுக்கு பக்குவம் இல்லை என்று, டில்லியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் கூறியிருந்தார். மேலும் ராகுலுக்கு அரசியல் அனுபவமும் பக்குவமும் வர கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் எனவும் கூறியிருந்தார்.

ஷீலா தீட்சித்தின் இந்தக் கருத்துக்கு பாஜக கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, 'பக்குவம் இல்லாத ராகுலை உத்தரப்பிரதேச பிரச்சாரத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: இரண்டு ஆண்டு ஆட்சிபற்றி பிரதமர் மோடியிடம் ரிப்போர்ட் கார்டு கேட்கும் ராகுல், 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி பற்றி ரிப்போர்ட் கார்டு தருவாரா?

ராகுல் காந்தி - அகிலேஷ் யாதவ் என்ற இரு இளவரசர்களும் கைகோர்த்து எதையும் செய்யவில்லை. அவர்கள் எப்படி உத்தரப்பிரதேச மக்களுக்கு நல்லது செய்வார்கள்? ஒருவரின் அம்மா, மகனால் கலங்கிப் போயிருக்கிறார். மற்றொருவரின் தந்தை, மகனால் வெறுத்துப்போயுள்ளார். அகிலேஷ், தனது அமைச்சர் காயத்ரி பிராப்தி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்' இவ்வாறு அவர் பேசினார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon