மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

கே.டி.எம். பைக் : மிகப்பெரிய சந்தை இந்தியா!

கே.டி.எம். பைக் : மிகப்பெரிய சந்தை இந்தியா!

பஜாஜ் நிறுவனத்தின்கீழ் செயல்படும் ஆஸ்திரேலிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான கே.டி.எம்.மின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழும் என அந்நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அமீத் நந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘இந்தியாவில் கடந்த ஆண்டு 36,000 கே.டி.எம். பைக்குகளை விற்பனை செய்ததன்மூலம் சர்வதேச அளவில் கே.டி.எம்.மின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இது, முதலிடத்திலுள்ள அமெரிக்காவைக் காட்டிலும் 1,000 பைக்குகள் மட்டுமே குறைவு. ஆனால் நிறுவனத்தின் டியுக் ரக பைக்குகளை பொருத்தவரையில், டியுக் 200 பைக்கின் விலை ரூ.1.43 லட்சம், டியுக் 250 பைக்கின் விலை ரூ.1.73 லட்சம், டியுக் 396 பைக்கின் விலை ரூ.2.25 லட்சம் என்றளவில் விற்பனை செய்யப்படுகிறது.

மேற்கூறிய இந்த பைக்குகளின் விற்பனை இந்த ஆண்டின் கடைசியில் ஐம்பதாயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, கடந்த ஐந்தாண்டுகளாகவே கே.டி.எம். பைக்குகளின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. கூடிய விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கிறோம். 2017ஆம் ஆண்டின் எங்களது போட்டி நிறுவனங்களாக டிவிஎஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ ஆகியவை உள்ளன. இரண்டாவது அரையாண்டில் அந்நிறுவனங்களை விற்பனையில் வீழ்த்திவிடுவோம்’ என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் கே.டி.எம். கடந்த ஐந்து வருடங்களாக வேகமாக வளர்ந்து வருகிறது. உயர்ந்த விலை பைக்குகளின் மார்க்கெட்டில் 48 சதவிகிதப் பங்குகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே.டி.எம். நிறுவனத்தில் இந்தியாவின் பஜாஜ் 47 சதவிகிதப் பங்குகளை கொண்டுள்ளது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon