மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

fecebook எமொஜி !

fecebook எமொஜி !

கடந்த வருடம் fecebook நிறுவனம் வெளியிட்ட அப்டேட் ஒன்றில், பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் எமொஜிகள் மட்டும் புதிய முறையில்,"Reactions"என்ற பெயரில் வெளியிட்டனர். வெளியானது முதல் தற்போதுவரை பலதரப்பினரும் இந்த அப்டேட்டினை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில் நண்பர்களின் புகைப்படங்கள் அல்லது அவர்கள் போஸ்ட்களை லைக் மட்டும் செய்துவந்த காலத்தில், love, haha, angry, wow, sad, like என புதிய முறையில் அதனை வர்ணிப்பது அனைவரிடமும் நல்ல வரவேற்பினை பெற்றது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு ஆண்டுகளில் மட்டும் எவ்வளவு எமொஜிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலை நேற்று வெளியிட்டது facebook நிறுவனம். அதன்படி சுமார் 1.79 பில்லியன் பயனர்கள் மொத்தம் 300 மில்லியன் எமொஜிகள் இந்த ஒரு ஆண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும், அதில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட ஒன்று love எமொஜி என்ற தகவலையும் வெளியிட்டது. அதுமட்டுமின்றி, ஒரு நாளில் அதிகம் பயன்படுத்தும் எமொஜிகளில் love எமொஜி மற்றவற்றின் மொத்த அளவில் பாதி பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

மெக்ஸிகோ நாட்டில்தான் அதிகமான எமொஜி இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது, அதன்பின்னர் சிலி, கிரீக் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளனது என்ற தகவலையும், அமெரிக்கா இந்தப் பட்டியில் 8ஆவது இடத்திலும் உள்ளது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon