மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

டாக்ஸி சேவை தொடங்கும் எண்ணமில்லை : ஜியோ

டாக்ஸி சேவை தொடங்கும் எண்ணமில்லை : ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிவிரைவில் டாக்ஸி போக்குவரத்து சேவையில் களமிறங்கவிருப்பதாக பரப்பப்பட்ட வதந்தி செய்திகளை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, இந்திய நெட்வொர்க் சந்தையில் அறிமுகமாகி சில மாதங்களிலேயே 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டாக்ஸி சேவையில் களமிறங்குவதாக தகவல்கள் வெளியாயின. மேலும் இந்நிறுவனம் 600 டாக்ஸி சேவைக்காக 600 கார்களை வாங்குவதற்கு ஆர்டர் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவன உயரதிகாரி ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை முற்றிலும் மறுத்துள்ளார். சம்பந்தமில்லாத துறைகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் களமிறங்காது. அதுபோல திட்டம் எதுவுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கடந்த வாரம் உபேர் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இதன்படி, டாக்ஸி கட்டணம் செலுத்துவதற்கு ’ஜியோ மணி’ மூலமாக பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon