மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 பிப் 2017

காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ?

காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ?

மும்பை பி.எம்.சி. தேர்தல் முடிவுகள் வந்து சில தினங்களே ஆனநிலையில், பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா, காங்கிரஸுடன் கை கோர்க்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து ஆர்வம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், துணை மேயர் பதவியை காங்கிரஸ் நபருக்குத் தருவதாக சிவசேனா காங்கிரஸை அணுகியிருக்கிறது. இண்டியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியின்படி, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், மூத்த கட்சி அலுவலர்களோடு கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் சிவசேனாவுடன் கை கோர்க்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டே, நாராயண் ரானே, மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் நசீம் கான் மற்றும் பாலா சாஹெப் தோரட் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். தேர்தலுக்குப் பின் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் பேசியபோது, ‘தற்போது மாநிலத்திலும், மத்திய அரசிலும் சிவசேனாவும் பாஜக-வும் கூட்டணியாக இருக்கிறது. அவர்கள்தான் முதலில் இதுகுறித்துப் பேச வேண்டும். அதன்பிறகே நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தீர்மானிப்போம். தற்போது, நாங்கள் மூன்றாவது கட்சிதான்’ என்றார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

சனி 25 பிப் 2017