மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 பிப் 2017

தமிழக அரசியல் : வாழப்பிடிக்காத கட்ஜு

தமிழக அரசியல் : வாழப்பிடிக்காத கட்ஜு

தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், சில வழிமுறைகளையும் பதிவிட்டு இளைஞர்களுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டிருந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு தமிழக முதல்வராக பழனிச்சாமி நீடிக்கும்வரை இனி, நான் தமிழன் கிடையாது என்று, தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கட்ஜு தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: எனது தமிழ் உடன்பிறப்புகளே, ஒரு சிறைப் பறவையின் கைப்பாவையாக உங்களது முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார். ஆனால் நீங்கள் மௌனம் காப்பது ஏன்? தலைசிறந்த சோழ, சேர, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களான நீங்கள் இப்படி படுகுழிக்குள் வீழ்ந்திருப்பதை உணர்ந்தால் உங்களது மூதாதையர்கள் வெட்கித் தலைகுனிய மாட்டார்களா? பெருமைக்குரிய திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், ஆண்டாள், சுப்பிரமணிய பாரதியார் வழிவந்தவர்கள் நீங்கள். சின்ன முணுமுணுப்புக்கூட காட்டாமல் இந்த மானக்கேட்டை ஏற்றுக்கொண்டிருப்பது அவமானமாகத் தெரியவில்லையா?

பெருமையுடன் ‘நானும் ஒரு தமிழன்' என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது எந்த முகத்துடன் அப்படிச் சொல்வேன்? இப்போது ஒன்றை வெளிப்படையாகவே சொல்கிறேன். தமிழர்களின் மீது படிந்துள்ள ஒரு கறையாக, சொருகியுள்ள கொடுக்காக உள்ள இந்த பழனிச்சாமி உங்களது முதல்வராக நீடிக்கும்வரை இனி நான் தமிழன் கிடையாது. மானங்கெட்டத்தனத்துடனும் அவப்பெயருடனும் வாழ்வதைப் பற்றிய அக்கறையில்லாத ஒரு சமூகத்தில் நான் ஒரு அங்கமாக நீடிக்கப்போவதில்லை. அதற்கு நான் சாவதே மேல். இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரே இவ்வாறு பதிவிட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

சனி 25 பிப் 2017