மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

கள்ள ஓட்டுகளைத் தடுக்க புதிய இயந்திரம்!

கள்ள ஓட்டுகளைத் தடுக்க புதிய இயந்திரம்!

தேர்தலின்போது கள்ள ஓட்டுகளைத் தவிர்க்க ஆதார் தகவல்கள் மூலம் இயங்கும் மின்னணு இயந்திரத்தை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தேர்தலின்போது கள்ள ஓட்டுகளை தவிர்ப்பதற்கு பல்வேறு பாதுகாப்புகள் போடப்பட்டாலும் இது தொடர்பான முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், இதைத் தடுக்கும்வகையில் புதிய மின்னணு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வயர்லெஸ் மற்றும் ப்ளூடூத் வசதிகளுடன் ஒரு மின்னணு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த மின்னணு இயந்திரம் கள்ள ஓட்டுகளை தவிர்க்கும்வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் மின்னணு இயந்திரங்கள் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கும் வகையில் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள்தான் வாக்களித்தார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது.

இந்த முறைகேடுகளை தவிர்க்கும்வகையில் ஆதார் எண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் புதிய மின்னணு இயந்திரத்தை வேல்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று வரும் கணேஷ் மற்றும் சிவபிரியா ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மின்னணு இயந்திரம் ஆதார் தகவல்களை பார்கோடு வசதியுடன் உள்வாங்கி வாக்காளர்களை ஓட்டுப்போட அனுமதிக்கும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வாக்காளர்களின் கைரேகை, கண் பார்வைகளை வைத்து போலியாக ஒட்டுப்போடுபவர்களை அடையாளம் காணமுடியும்.

மேலும் இந்த இயந்திரம் ஓட்டுப் போட்டு முடித்தவுடன் ஒப்புகைச் சீட்டினை வழங்கும். இந்த மின்னணு இயந்திரத்தை இனி வரும் தேர்தல்களில் பயன்படுத்தினால் முற்றிலுமாக கள்ள ஓட்டுகள் போடுவதைத் தவிர்க்கலாம் என்றும் இதுகுறித்து அரசிடம் பேசவுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon