மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

பொருளாதார தடை ஏற்படாது : மோடி

பொருளாதார தடை  ஏற்படாது : மோடி

கடந்த பதினைந்து வருடங்களாக மணிப்பூரின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என நரேந்திர மோடி விமர்சித்திருக்கிறார்.

மேலும் மணிப்பூருக்கு பொருளாதாரத் தடை விதித்திருப்பவர்களோடு இணைந்து மணிப்பூர் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங் கூட்டுச்சதி செய்கிறார் எனவும் மோடி தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், கடந்த பதினைந்து வருடங்களில் காங்கிரஸ் செய்யாததை பதினைந்து மாதங்களில் பாஜக செய்யும் எனவும் அவர் பேசியிருக்கிறார். ‘காங்கிரஸ் கடந்த 15 வருடங்களாக என்ன செய்யவில்லையோ, அதை நாங்கள் பதினைந்து மாதங்களில் செய்வோம். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடங்களில் எல்லாம் வளர்ச்சியே இல்லை, ஊழல் மட்டுமே இருக்கிறது’ என, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த கூட்டத்தில் மோடி பேசினார். ‘பாஜக ஆட்சிக்கு வந்தால், மணிப்பூரில் பொருளாதாரத் தடை எப்போதுமே ஏற்படாது. இதை நான் உறுதியாகச் சொல்கிறேன்’ என அவர் தெரிவித்திருக்கிறார். மார்ச் 4 மற்றும் 8ஆம் தேதி இரண்டு கட்டங்களாக மணிப்பூர் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon