மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : கே.ஆர்.ஹரி

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : கே.ஆர்.ஹரி

1941ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஓவியர் கே.ஆர்.ஹரி, சென்னை கவின் கலைக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தவர். தமிழ்நாடு ஓவியம் நுண்கலைக் குழு சார்பாக 1967 முதல் 1995 வரை நடைபெற்ற பல ஓவியக் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளார். 1967 மற்றும் 1968ஆம் ஆண்டுகளில் ஹைதராபத்தில் நடைபெற்ற தேசியக் கண்காட்சியிலும் முற்போக்கு ஓவியர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஓவியக் கண்காட்சியிலும் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. 1968,’69,’72,’74 ஆகிய ஆண்டுகளில் கல்கத்தாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

1972ஆம் ஆண்டு புதுடில்லியில் UNICEF நடத்திய சோழமண்டல ஓவியர்களுக்கான கண்காட்சியிலும் ஓவியர் கே.ஆர்.ஹரி பங்கேற்றுள்ளார். பிரிட்டிஷ் கவுன்சில் சென்னையைச் சேர்ந்த 40 ஓவியர்களை தேர்ந்தெடுத்து நடத்திய கண்காட்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

1979ஆம் ஆண்டு மட்டும் பெங்களூருவில் நடைபெற்ற சோழ மண்டல ஓவியர்களுக்கான கண்காட்சி, கேரள அகாடமி மற்றும் அமெரிக்கன் சென்டர் நடத்திய கிராபிக் பயிற்சிப் பட்டறை ஆகியவற்றில் பங்குவகித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு தமிழ்நாடு ஓவியம் நுண்கலைக் குழு இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. இந்த அமைப்பு கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் 1988ஆம் ஆண்டு நடத்திய கிராபிக் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டார். 1989ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற தேசிய ஓவியக் கண்காட்சியில் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தினார். 1996ஆம் ஆண்டு சென்னையில் சோழமண்டல ஓவியர்களின் முப்பது வருட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில் இவரது ஓவியங்களும் இடம்பெற்றன. 2001இல் சிறிய அளவிலான வெண்கலச் சிலைகளின் கண்காட்சி, சோழமண்டல காட்சிக் கூடத்தில் நடைபெற்றபோது அதிலும் கலந்துகொண்ட சென்னை கலை இயக்க ஓவியர் கே.ஆர்.ஹரி 2011ஆம் ஆண்டு மறைந்தார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon