மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

அதிகரிக்கும் இந்தியா - யு.ஏ.இ. வர்த்தகம்!

அதிகரிக்கும் இந்தியா - யு.ஏ.இ. வர்த்தகம்!

ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் வர்த்தகம், வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

துபாயில் மத்திய கிழக்கு மின்னணு கண்காட்சி நேற்று தொடங்கியது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 50 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அங்கு காட்சிப்படுத்தின. இக்கண்காட்சியில் இந்திய தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியை மத்திய வர்த்தக தொழிற்துறை அமைச்சகமும் இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதுபற்றி இந்திய தொழில் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இக்கண்காட்சியில் இந்திய நிறுவனங்களின் பங்கேற்பானது, மத்திய கிழக்கு சந்தைகளில் குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான வர்த்தக ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் இரு நாடுகளுடனான வர்த்தகம் வலுப்பெறுவதோடு, முதலீடுகளும் அதிகரிக்கும். தற்போது, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக மதிப்பு 60 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது, வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும். சமீபத்தில் வெளியான மத்திய பட்ஜெட் அறிக்கையில் சிறு, குறு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விதிப்பை குறைப்பதற்கான அறிவிப்புகளால், சுமார் 97 சதவிகித தொழில்கள் பயன்பெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon