மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

ரியல் எஸ்டேட் துறையில் மஹிந்திரா!

ரியல் எஸ்டேட் துறையில் மஹிந்திரா!

வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் காலூன்றி வருகிறது. அதன்படி, மஹிந்திரா ’லைஃப் ஸ்பேஸ் டெவலப்பர்ஸ்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுகிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், அரசிடமிருந்து அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சங்கீதா பிரசாத் கூறுகையில், ‘மஹிந்திரா நிறுவனமும் ஜப்பானைச் சேர்ந்த சுமிட்டோமா கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து வடசென்னையிலுள்ள பொன்னேரியில் தொழிற்பூங்கா அமைக்க உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வடசென்னை திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எங்களுடைய முதல் திட்டமாக மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி திட்டத்தை சிங்கபெருமாள் கோவிலில் செல்படுத்தியதுபோலவே, இரண்டாவது திட்டமாக தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

மேலும் ஜெய்ப்பூரில் மஹிந்திரா வோர்ல்ட் சிட்டி அமைக்கும் திட்டதிற்கு 3000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவுள்ளோம். சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் இருப்பிடம் அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்காக 1500 ஏக்கர் வரை நிலம் தேவைப்படுகிறது. தற்போது 35 ஏக்கர் மட்டுமே கையிருப்பில் உள்ளது. விரைவில் மற்ற நிலங்களை கையப்படுத்துவோம்’ என்று அவர் கூறினார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon