மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

போலீஸ் தடியடிக்கு நான் காரணமல்ல : ஓ.பி.எஸ்.

போலீஸ் தடியடிக்கு நான் காரணமல்ல : ஓ.பி.எஸ்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீஸ் தடியடிக்கு நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சிக்கு இன்று வழங்கிய பேட்டியில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: ‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிற்கு பின் எனது நீதி கேட்கும் பயணம் தொடங்கும். தமிழகத்தில் தற்போது உள்ள முதலமைச்சர் யாருடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி வருகிற தேர்தல்களில் வெளிப்படும்.

சொகுசு விடுதியில் இருந்தபோது பல எம்.எல்.ஏ.க்கள் எனக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்கள். ஆனால் அவர்களை வெளியே விடாமல் அடைத்து வைத்து அப்படியே அழைத்து வந்து நம்பிக்கைத் தீர்மானத்தில் கலந்துகொள்ள வைத்துள்ளார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் முதல்வராக பொறுப்பு ஏற்றவுடன் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள், நாடாளுமன்ற துணை சபாநாயகர் ஆகியோர் மூலம் எனக்கு கடுமையான இடையூறு கொடுத்தார்கள். நானாக பதவி விலக வேண்டுமென என்ற நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டனர். என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் என் மீது வீண் பழி சுமத்தினர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீஸ் தடியடிக்கு நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அத்துமீறி தடியடி நடத்திய காவல் துறையினருக்கு உறுதியாக தண்டனை கிடைக்கும்’ என்று அவர் கூறினார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon