மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

தலைமைச் செயலாளரிடம் புகார் : ஸ்டாலின்

தலைமைச் செயலாளரிடம் புகார் : ஸ்டாலின்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடியது சட்டப்படி தவறு. இதுகுறித்து தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்திற்கு இன்று காலை சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடியது சட்டப்படித் தவறு அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதாவின் படங்களை அகற்றாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களித்து இயற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை. முதல்வரும், தலைமைச் செயலாளரும் அரசு சட்டவிதிகளுக்கு எதிராக செயல்படுகின்றனர் என தெரிவித்தார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon