மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

வாட்ஸ் அப் பயன்படுத்தும் 20 கோடி இந்தியர்கள்!

வாட்ஸ் அப் பயன்படுத்தும் 20 கோடி இந்தியர்கள்!

இந்தியாவில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 20 கோடியாக உயர்ந்துள்ளதென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப், கடந்த 2009ஆம் ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பின்னர் 2014ஆம் ஆண்டில் பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை கைப்பற்றியது. ஸ்மார்ட்போன்களில் இன்டெர்நெட் பயன்பாட்டோடு செயல்படும் இந்த வாட்ஸ் அப் செயலி இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை என்று கூறலாம். அந்தளவுக்கு மக்களின் முன்னணி செய்தித் தொடர்பு செயலியாக வாட்ஸ் அப் மாறிவிட்டது. இதில் வாய்ஸ் கால், வீடியோ காலிங், குறுஞ்செய்தி, மியூசிக், வீடியோ, புகைப்படம் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் ஒரு பில்லியனை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொருத்தவரை, வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, தற்போது வாட்ஸ் அப் உபயோகிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 20 கோடியாக அதிகரித்துள்ளது. இதை, வாட்ஸ் அப் நிறுவனர்களில் ஒருவரான பிரையான் ஆக்டன் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார். டெல்லி ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பங்கேற்றபோது இத்தகவலை அவர் வெளியிட்டார். மேலும் தினந்தோறும் புதுப்புது அப்டேட் வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமாக, அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிவதாகவும் இந்தியாவில் மட்டுமே 20 கோடி பயனர்கள் உள்ளது மிகப்பெரிய சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon