மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

விஜேந்தர் சிங்: சீன வீரர் விலகல்?

விஜேந்தர் சிங்: சீன வீரர் விலகல்?

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து ஆசிய பசிபிக் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீரர் விஜேந்தர்சிங், தனது அடுத்த மோதலில் சீன வீரர் சுல்பிகர் மைமைடியாலியுடன் மோதுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டி மும்பையில் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறயிருந்த நிலையில் சுல்பிகர் போட்டியில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். அதற்கான காரணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இதனால் அதே தேதியில் விஜேந்தருடன் வேறு ஒரு வீரரை மோத வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விஜேந்தர்சிங் அளித்த பேட்டியில், “இந்த விஷயத்தை நான் நேர்மறையாக பார்க்கிறேன். சுல்பிகர் என்னுடன் மோதாமல் தவிர்த்ததற்கு நிச்சயம் ஏதாவது

காரணம் இருக்கும். எனது அடுத்த போட்டியாளர் யாராக இருந்தாலும், அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon