மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 9 டிச 2019

சரிவடைந்தது கம்ப்யூட்டர் விற்பனை!

சரிவடைந்தது கம்ப்யூட்டர் விற்பனை!

கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் கம்ப்யூட்டர் விற்பனை 15 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் 1.01 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே 2016ஆம் ஆண்டில் 85.70 லட்சம் கம்ப்யூட்டர்களாக குறைந்துள்ளது. எனவே விற்பனையில் 15 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில் மட்டும் 19.20 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகிள்ளன. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 24 சதவிகித சரிவாகும்.

தனிநபர் கம்ப்யூட்டர் விற்பனை கடந்த ஆண்டில் 48.50 லட்சத்தில் இருந்து, 42.20 லட்சமாக குறைந்துள்ளது. இது 13 சதவிகித சரிவைக் காட்டுகிறது. அதேபோல, நிறுவனங்களுக்கான கம்ப்யூட்டர் விற்பனையும் 52.70 லட்சத்திலிருந்து 43.50 லட்சமாகக் குறைந்து 17 சதவிகித சரிவை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த கம்ப்யூட்டர் விற்பனையில் ஹெச்.பி. நிறுவனம் 28.4 சந்தைப் பங்குகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அடுத்ததாக, 23.4 சதவிகிதப் பங்குகளுடன் டெல் நிறுவனம் இரண்டாவது இடத்திலும், 17.6 சதவிகிதப் பங்குகளுடன் லெனொவோ மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon