மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாவலராக குரங்குகள்!

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாவலராக குரங்குகள்!

உத்தரப்பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புக்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ள குரங்குகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

சமாஜ்வாதி கட்சி ஆளும் உ.பி.யில் கடந்த பிப்ரவரி 11இல் தொடங்கி ஏழுகட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்குமுன்பு மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

மொராதாபாத் பகுதியில் வாக்குச் சாவடிகளில் குரங்குகளின் சேட்டைகள் அதிகளவு இருந்ததால் வாக்களிக்கச் செல்லும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மொராதாபாத் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.அப்பகுதிகளிலும் குரங்குகளின் தொல்லை அதிகம் இருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்த, பயிற்சி அளிக்கப்பட்ட குரங்குகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் கல்லூரிக்கு மற்ற குரங்குகள் வந்தால் அவற்றை விரட்டி அடிக்க பயிற்சி அளிக்கப்பட்ட குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon