மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

லிங்குசாமி: ‘சண்டக்கோழி 2’ வருகிறது

லிங்குசாமி: ‘சண்டக்கோழி 2’ வருகிறது

தமிழ் சினிமா இயக்குநர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. ‘ஆனந்தம்’ என்ற குடும்பப் படத்தின் மூலமாக தன் பாதையைத் தொடங்கி, ஆக்‌ஷன் படங்கள் எடுப்பதில் சிறந்த இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் இயக்கத்தில் வெளியான ‘ரன்’, ‘சண்டக்கோழி’ மற்றும் ‘பையா’ உள்ளிட்ட அனைத்துப் படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.

லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘அஞ்சான்’ திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் பலரும் விமர்சிக்கத் தொடங்கினார்கள். இதனால் நீண்டகாலமாக திரைப்படம் இயக்காமல் இருந்தார் லிங்குசாமி. இவர், தற்போது ‘சண்டக்கோழி 2’ படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது. பின்பு ‘சண்டக்கோழி 2’ தள்ளிப்போனது அல்லு அர்ஜுனுடன் லிங்குசாமி பணிபுரிய உள்ளார் எனவும் செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லிங்குசாமி, ‘அடுத்த படத்தில் விஷாலுடன்தான் பணிபுரிகிறேன். அந்தப் படம் முடிந்ததும் உடனடியாக அல்லு அர்ஜுன் படத்தை இயக்குகிறேன்’ என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon