மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

ஹூண்டாய் : ஆண்டுக்கு இரண்டு மாடல்கள் அறிமுகம்!

ஹூண்டாய் : ஆண்டுக்கு இரண்டு மாடல்கள் அறிமுகம்!

அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு இரண்டு மாடல் கார்கள் வீதம் வெளியிட ஹுண்டாய் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

தென்கொரியாவின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய், கார் தயாரிப்பில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிலையில், தற்போது ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில், மூன்று பிரிவுகளின் கீழ் ஆண்டுக்கு இரண்டு மாடல்கள் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு கார்களை தயாரித்து வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் சிறிய ரக கார்களும், எஸ்யூவி ரக கார்களும் அதிகளவில் வெளியிடப்படும். ஹுண்டாய் கார் தொழிற்சாலையிலிருந்து வருகிற 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மூன்று புதிய பிரிவுகளிலும் கார்கள் வெளியிடப்படும். மேலும் பல்நோக்கு வாகனப் பிரிவில் உற்பத்தி தொடங்கும் எண்ணம் தற்போது இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்துக் கார்களும் சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 7 லட்சம் கார்கள் உற்பத்திசெய்யும் திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon