மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 6 டிச 2019

மொசூல் விமான நிலையம் மீட்பு!

மொசூல் விமான நிலையம் மீட்பு!

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் விமான நிலையத்தை ஈராக் அரசு ராணுவம் மீட்டபின்னர் அங்கு ஈராக் தேசியக்கொடியை ஏற்றி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா ஆதரவுப் படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்டு வருகிறது. ஈராக் நாட்டின் 2வது பெரிய நகரான மொசூல், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த மாதம் அதன் கிழக்குப் பகுதியை ஈராக் அரசு ராணுவம் கடும் சண்டையின் மூலம் மீட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விமான நிலையத்தை மீட்க அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இருந்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளும் பதிலடி தொடுத்தனர். ராணுவத்தின் மீது தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்கினார்கள். 4 மணிநேர சண்டைக்குப் பிறகு மொசூல் விமான நிலையத்தை ராணுவம் மீட்டது. அங்கிருந்த தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். அதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஈராக் ராணுவ வீரர்கள் விமான நிலையத்தைச் சுற்றி நின்று தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். பின்னர், அங்கு ஈராக் தேசியக் கொடியை ஏற்றி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon