மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

அரசியல் விமர்சனம் : தொடரும் சர்ச்சைகள்!

அரசியல் விமர்சனம் : தொடரும் சர்ச்சைகள்!

குஜராத்திலுள்ள காட்டுக் கழுதைகளை பிரபலப்படுத்தும்நோக்கில் அந்த மாநில சுற்றுலாத் துறை வெளியிட்ட விளம்பரம் குறித்து, ரேபரேலியில் கடந்த சில நாட்களுக்குமுன்பு அகிலேஷ் யாதவ் பேசியது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளிக்கும்வகையில் பேசிய பிரதமர் மோடி, கழுதைகளிடம் இருந்து விசுவாசத்தையும், கடின உழைப்பையும் தாம் கற்றுக்கொண்டதாக அகிலேஷ் யாதவுக்கு பதில்தரும்வகையில் பேசியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி நிஜமாகவே கழுதைபோல உழைக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கிண்டலாகக் கூறியுள்ளார். இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் மோடி, நீங்கள் கூறியது சரியே. நீங்கள் நிஜமாகவே ஒரு கழுதையை போலத்தான் உழைக்கிறீர்கள்' என்று கிண்டலாகக் கூறியுள்ளார். அதையடுத்து, அகிலேஷ் யாதவைத் தொடர்ந்து தற்போது திக்விஜய் சிங்கும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon